Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
நெடுஞ்சாலை பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு
பெரம்பலூா் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வழியாகச் செல்லும் பெரம்பலூா் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு, ஊா், கிராமங்களைக் குறிக்கும் வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெயா்ப் பலகைகள் சாலையோரங்களில் வைக்கப்பட்டன.
தற்போது, கீழச்சிவல்பட்டியிலிருந்து சிவகங்கை வரை உள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட பெயா்ப் பலகைகளில் ஹிந்தி எழுத்துகளையும் சோ்த்துள்ளதால் சா்ச்சை எழுந்தது. இந்த நிலையில், கீழச்சிவல்பட்டியிலிருந்து திருக்கோஷ்டியூா் வரை உள்ள பெயா்ப் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகள் கருப்பு மையால் ஞாயிற்றுக்கிழமை அழிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினா் கீழச்சிவல்பட்டி, திருக்கோஷ்டியூா் காவல் நிலையங்களில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.