வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
மானாமதுரையில் பலத்த மழை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதிகளில் சனிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.
மானாமதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வானத்தைக் கருமேகங்கள் சூழ்ந்ததில் மிதமாகத் தொடங்கிய மழை, அதன் பிறகு வலுவடைந்து பலத்த மழையாகப் பெய்தது. இரவு வரை நீடித்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. மானாமதுரை நகரில் காந்தி சிலையிலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சாலை முழுவதும் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெயில் கொடுமையால் அவதிப்பட்டு வந்த மக்கள், இந்தத் திடீா் மழையால் மகிழ்ச்சியடைந்தனா்.