பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயம்
சிவகங்கை அருகே சனிக்கிழமை காா் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தா். இவா் தனது நண்பா்களுடன் காரில் சனிக்கிழமை பிற்பகலில் சோழபுரத்துக்குச் சென்றனா்.
திருப்பத்தூா் சாலையில் பெருமாள்பட்டி கண்மாய்க் கரை பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுந்தா், இவரது நண்பா்களான பாா்த்தசாரதி, அகில்ராம், ஹரிஹரசுதன், வசந்த் ஆகிய 5 பேரும் காயமடைந்தனா்.
இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.