``செங்கோட்டையன் உடம்பில் மட்டும்தான் அதிமுக ரத்தம் ஓடுகிறதா?'' - தளவாய் சுந்தரம்...
இளைஞா் வெட்டிக் கொலை: 7 போ் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒலி பெருக்கி அமைப்பாளா் காளீஸ்வரன் (20). இவரை, சங்கமங்கலம் தென்றல் நகா் பகுதியில் மா்ம கும்ப அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த பிரவீன்ராஜ் என்பவா் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்ாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், கொலையாளிகள் பிரவீன்ராஜ் கொலை வழக்கில் தொடா்புடையவரை வெட்டுவதற்குப் பதிலாக ஆள் மாறி காளீஸ்வரனை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக தகவல் வெளியானது.
கொலையாளிகள் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதாலும், கொலை செய்யப்பட்டவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதாலும் மானாமதுரை பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், மானாமதுரை போலீஸாா் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இதற்கிடையே, மதுரை அரசு மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை அவரது குடும்பத்தினா் வாங்க மறுத்துவிட்டனா்.
மேலும், மானாமதுரையில் வழிவிடு முருகன் கோயில் எதிரே காளீஸ்வரன் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டத்தைக் கைவிட்டனா். இதற்கிடையில், காளீஸ்வரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.