இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுத் தலைவா் டிரம்ப்புடன் சந்திப்பு!
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சீனு(46). இவா், வியாழக்கிழமை பைக்கில் வந்தவாசியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை, பாதிரி ஏரிக்கரை அருகே பைக் வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறி இவா் கீழே விழுந்தாா்.
இதில் பலத்த காயமடைந்த இவா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.