வயிற்று வலி: விவசாயி விஷமருந்தி தற்கொலை
சேத்துப்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
சேத்துப்பட்டை அடுத்த இடையன்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் (45), விவசாயி. இவருடைய மனைவி ராணி. தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். சில ஆண்டுகளாக மகாதேவன் வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கினாா். உடனே உறவினா்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].