செய்திகள் :

வாழ்க்கையை எண்ணி பயப்படுகிறீர்களா? நீங்கள் விரும்பியவாறே எல்லாம் நடக்க உதவும் ஸ்ரீசுதர்சன ஹோமம்!

post image

ஸ்ரீசுதர்சன ஹோமம் வரும் 2025 செப்டம்பர் 17 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஸ்ரீசுதர்சன ஹோமம்
ஸ்ரீசுதர்சன ஹோமம்

மந்திரங்களுள் சிறப்பானதான ஸ்ரீசுதர்சன மந்திரம் சொல்பவர்கள் அச்சங்கள் கவலைகள் நீங்கிய வாழ்வை அடைவர் என்பது ஆன்மிகம் சொல்லும் ரகசியம். ஆற்றலைப் பெருக்கி, செல்லும் இடமெங்கும் வெற்றியை அருளும் வழிபாடு சுதர்சன வழிபாடு. கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள், தீராத பகை என அனைத்தையும் நீக்க வல்லது ஸ்ரீசுதர்சன மகாஹோமம்.

எண்ணியவைகளை எண்ணியவாறே அருளும் அற்புதமான இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்வார்கள். இதில் கலந்து கொண்டால் எல்லா துன்பங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

மகா சுதர்சன ஹோமத்தின்போது, சக்தி வாய்ந்த பல மந்திரங்கள் சொல்லி ஹோமப் பொருட்களை அக்னி பகவானுக்குச் சமர்ப்பிக்கிறோம். ஸ்ரீசுதர்சன மூர்த்தியைத் தியானித்து வணங்கிச் செய்யப்படும் இந்த ஹோமத்தால் விபத்துக்கள், எதிரிகளின் தாக்குதல் போன்றவை நடைபெறாமல் நம்முடன் இருந்து ரக்ஷிக்கும்.

தீமைகள் நீங்கவும் துர் சக்திகள் விலகவும் வினைப்பயனால் உண்டாகும் பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது ஸ்ரீசுதர்சன ஹோமம்.

ஸ்ரீசுதர்சன ஹோமம்
ஸ்ரீசுதர்சன ஹோமம்

செய்வதற்குச் சிரமமானதும் அதிக சிரத்தை வேண்டியதுமான இந்த ஹோமத்தை உங்கள் சக்தி விகடன் உங்களுக்காக, உங்கள் குடும்ப நல்வாழ்வுக்காகச் செய்ய இருக்கிறது. வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெற உள்ளது.

காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு 48 நாள்களில் தீர்வு பெறுங்கள்!

சாந்நித்யம் மிக்க இந்தப் பிருந்தாவனத்தில் சக்தி விகடன் வாசகர்களின் நலனுக்காக இந்த சுதர்ஸன ஹோமம் நடைபெற உள்ளது. கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அரூபமாக அருளும் புண்ணிய க்ஷேத்திரம் இது. இங்குச் சென்றாலே மன நிம்மதியும் அமைதியும் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. 1974-ம் ஆண்டு மந்திராலய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ கஜயீந்திர சுவாமிகளால் வழங்கப்பட்டு வத்தலகுண்டுவில் தற்போது ஆராதிக்கப்படும் ஸ்ரீராகவேந்திரர் ம்ரித்திகை ரூப வடிவில் எழுந்தருளி பிருந்தாவனம் பக்தர்களைக் காத்து வருகிறார்.

ஸ்ரீராகவேந்திரரின் பக்தரான T.N.சுந்தரராஜ ராவ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு உருவான இந்தப் பிருந்தாவனத்துக்கு வந்தவர்கள் பெற்ற பலன்கள் அநேகம். அவரது வழியையொட்டி தற்போது அவரது குமாரர் B.S. கோபிநாதன் அவர்களின் இந்தப் பிருந்தாவனத்தை நிர்வகித்து வருகிறார். லோகத்தின் க்ஷேமத்துக்காகவே இங்கு அன்றாடம் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

இந்த ஹோமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு சத்ருபயம் நீங்கும். கடன் தொல்லை நீங்கி சுபிட்சம் உருவாகும். ஆயுள், ஆரோக்கியம் கூடும். அனைத்து விதமான குறைகளும் நிவர்த்தியாகும். 

ஆரோக்கியம், ஆயுள், அபிவிருத்தி, மணப்பேறு, குழந்தைப்பேறு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். தீமைகள், தோஷங்கள் விலகி, சந்தோசம் பெருக இந்த சுதர்சன ஹோமம் நிச்சயம் உதவும் என்கின்றன ஞான நூல்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.

அத்துடன், அவர்களுக்கு சிறப்பு ரட்சை , அட்சதை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் ஏன்!

எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் ஏன்! 8 காரணங்களை சொல்லி உங்கள் நல்வாழ்வுக்கு வழிகாட்டுகிறது ஆன்மிகம்! 2025 செப்டம்பர் 17 வத்தலகுண்டு ஸ்ரீச... மேலும் பார்க்க

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி க... மேலும் பார்க்க

48 நாள்களில் காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஸ்ரீசுதர்சன ஹோமம்! சங்கல்பியுங்கள்

தடைகளைத் தகர்த்து உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஸ்ரீசுதர்சன ஹோமம்! சங்கல்பியுங்கள். 2025 செப்டம்பர் 17 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயத்தில் ஸ்ரீசுதர்சன மகாஹோமம் நடைபெற உ... மேலும் பார்க்க