Mohanlal: "மோகன்லால் ஓர் அழகான பூக்கி; அவர் பூக்கி லால்!" - மாளவிகா மோகனன்
சத்யன் அந்திகாடு - மோகன்லால் கூட்டணி உருவாகியிருக்கும் 'ஹ்ருதயபூர்வம்' திரைப்படம் ஓணம் ஸ்பெஷலாக கடந்த வாரம் திரைக்கு வந்திருந்தது.
சங்கீத் பிரதாப், மாளவிகா மோகனன், சங்கீதா எனப் பலர் நடித்திருக்கும் இந்த மலையளப் படத்திற்கு பெரும் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

இந்த திரைப்படம் தனக்கு எவ்வளவு முக்கியமானது, இது எப்படியான அனுபவத்தை தந்திருக்கிறது என்பது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
மாளவிகா மோகனன், "கடந்த சில நாட்களாக நீங்கள் கொடுத்து வரும் அன்புக்கு நன்றி. இந்தப் படம் மிகவும் அழகான அனுபவமாக இருந்தது.
சத்யன் சார், எனக்கு ஹரிதா கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி. நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் உங்களுடன் பணியாற்றிவிட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.
உங்களின் பெண் கதாபாத்திரங்களை நீங்கள் ஆழமான, நுணுக்கமான, கருணையுடன் எழுதும் விதம் என்னை எப்போதும் நெகிழ வைத்திருக்கிறது.
அந்தக் கதாபாத்திரங்கள் வாழ்கின்றன, சுவாசிக்கின்றன, கதை முடிந்த பின்னும் நீண்ட நேரம் மனதில் நிற்கின்றன.
இந்த பயணத்தில் நீங்கள் மிகவும் அன்பாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தீர்கள்.
எனது பயணத்தில் இந்த அத்தியாயம் எப்போதும் மிக வண்ணமயமான குறியீடு பெறும்.
மோகன்லால் சார் ஒரு நடிகராக எவ்வளவு அற்புதமானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், அவர் கருணையும், அக்கறையும், குறிப்பாக ஒரு இளம் நடிகையாக எனது பாதையைத் தேடிக்கொண்டிருக்கும் எனக்கு அவர் காட்டிய ஆதரவு என அனைத்தும் என்னை மிகவும் ஈர்த்தது. அவர் மிகவும் பொறுமையாகவும், ஆதரவாகவும் இருந்தார்.
படப்பிடிப்புத் தளத்தை எப்போதும் இனிமையான இடமாக மாற்றினார். கடினமான, சவாலான நாட்களை சற்று எளிதாக்குவது எப்படி என்று அவருக்கு எப்போதும் தெரியும்.
நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில், இவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தில் அவருடன் பணியாற்றுவேன் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை.

இந்த வாய்ப்பிற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு படியிலும் அவர் காட்டிய கருணைக்கும், தாராள மனப்பான்மைக்கும் நான் மிகவும் நன்றியுடையவளாக இருக்கிறேன்.
இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு எனக்கு முக்கியமானது. மேலும், அவர் ஒரு அழகான பூக்கி. பூக்கி லால் என்ற புனைப்பெயர் அவருக்கு பொருத்தமாக இல்லையா?" எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...