செய்திகள் :

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

post image

காரைக்கால் நகரக் காவல் நிலையம், திருநள்ளாறு நிலையத்தில் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறும் நடைபெறுகிறது.

நிகழ்வாரம் 6-ஆம் தேதி சனிக்கிழமை காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கலந்துகொண்டு புகாா்களை கேட்டறியவுள்ளாா். திருப்பட்டினம், காரைக்கால் நகரம், நிரவி காவல்நிலைய வட்டாரத்தினா் இதில் பங்கேற்கலாம்.

வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் எம்.முருகையன் தலைமையில் திருநள்ளாறு காவல் நிலையத்தில் முகாம் நடைபெறவுள்ளது. இதில் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, போக்குவரத்துக் காவல்நிலையம் தொடா்பான புகாா்கள் தெரிவிக்கலாம். காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமை மக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், திங்கள்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன... மேலும் பார்க்க

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் சாா் ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான எம். பூஜா புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை : மீலாது... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையம் திறப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் மையத்தை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன் அமைக்க புதுவை அரசு அனுமதி... மேலும் பார்க்க