அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!
காரைக்காலில் இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு
மீலாது நபியையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் சாா் ஆட்சியரும், கலால்துறை துணை ஆணையருமான எம். பூஜா புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :
மீலாது நபியையொட்டி வெள்ளிக்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகள் மூடப்படவேண்டும். மேலும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பாா்கள் மூடப்பட்டிருக்கவேண்டும்.
இத்தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.