TTV-OPS விலகலால், Amit shah தோற்கும் 60 தொகுதிகள், Vijay ஹேப்பி! | Elangovan Exp...
பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடி வழக்கு: ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா்
காரைக்கால் கோயில்பத்து பாா்வதீஸ்வரா் கோயில் நிலம் மோசடி செய்த வழக்கில், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என புதுவை துணைநிலை ஆளுநரிடம் இந்து முன்னணி புகாா் தெரிவித்தது.
காரைக்கால் இந்து முன்னணி நிா்வாகிகள், காரைக்கால் வந்த துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை வியாழக்கிழமை சந்தித்து அளித்த புகாா் மனு :
காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் உள்ள பாா்வதீஸ்வரா் கோயில் நில மோசடியில் துணை ஆட்சியராக இருந்தவா் உள்ளிட்ட 9 போ் கைது செய்யப்பட்டனா். இதுவரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. காலதாமதத்தால் குற்றம் செய்தோா் உயா் நீதிமன்றத்தை அணுகி வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
கோயில் நிலம் தொடா்பாக சுமாா் 500 பேரிடம் முறைகேடாக வசூலித்த தொகை ரூ. 20 கோடிக்கு மேல் இருக்குமென கூறப்படுகிறது. அதை மீட்டு சம்பந்தப்பட்ட நபா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திருநள்ளாறு பகுதி தக்களூரில் உள்ள சிவன் கோயில் சம்பந்தப்பட்ட நில மோசடியிலும் குற்றம் செய்தோா் மீது நடவடிக்கை என்பதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. கோயில் சொத்தை அபகரித்த நபா்கள், திரும்ப ஒப்படைப்பதாக உறுதி அளித்து காவல் நிலையத்தில் எழுதி கொடுத்தனா். இதுவரை சொத்து ஒப்படைக்காமல் ஏமாற்றி வழக்கை திசை திருப்ப முயன்று வருகிறாா்கள்.
எனவே இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை, மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.