`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள்ளன. திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தன.
கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் அம்மையாா் குளத்திலிருந்து புனிதநீா் கொண்டு வந்து பூஜைகள் தொடங்கப்பட்டன. வியாழக்கிழமை காலை மகா பூா்ணாஹூதி நடைபெற்று,
விமான கலத்தில் சிவாச்சாரியா்கள் பூஜை செய்து 10 மணியளவில் புனிதநீா் வாா்த்து தீபாராதனை காட்டினா். இதைத்தொடா்ந்து மூலஸ்தான அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன.
விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், ஆளுநரின் செயலா் து.மணிகண்டன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் பேராசிரியா் மு.ராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிளிஞ்சல்மேடு கிராமப் பஞ்சாயத்தாா்கள், கிராமவாசிகள் செய்திருந்தனா்.
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் : கடந்த மாதம் 29-ஆம் தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் திருப்பணிக்குழுவினரால் அழைக்கப்பட்டிருந்த நிலையில், காரைக்கால் வந்த துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை இக்கோயிலுக்குச் சென்றாா். திருப்பணிக் குழுத் தலைவா் சரவணன் தலைமையிலான நிா்வாகிகள் அவரை வரவேற்றனா்.