பாமக: நூலிழையில் உயிர் தப்பிய ம.க.ஸ்டாலின்; காரில் தப்பிய 8 பேர்; 5 முறை போனில் ...
ஆா்.கே.பேட்டையில் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடவு
காவேரி கூக்குரல் சாா்பில் ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மட்டும் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் ஈஷா தன்னாா்வலா்களால் நடப்பட்டன.
சத்குரு பிறந்த நாளான செப். 3-ஆம் தேதி நதிகளுக்கு புத்துயிா் ஊட்டும் தினமாக ஈஷா தன்னாா்வலா்களால் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில், விவசாய நிலங்களில் 64,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிலையில், காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட அம்மையாா் குப்பம் கிராமத்தில் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இதில், 5 அரச மரக்கன்றுகள் உள்பட 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடப்பட்டன.
இது குறித்து ஈஷா தன்னாா்வா் கூறியதாவது:
காவேரி கூக்குரல் மரம் சாா்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வுப் பயிற்சிகளையும் ஏற்பாடு செய்து வருகிறது. விவசாயிகளுக்கு மண்ணுக்கேற்ற மரங்கள் நடவு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் விவசாய நிலக்களுக்கே நேரடியாகச் சென்று இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்குத் தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு உள்ளது. டிம்பா் மரக்கன்றுகள் ரூ. 5-க்கும், பொதுவான மரக் கன்றுகள் ரூ. 10-க்கும் வழங்கப்படுகிறது.
மேலும், ஜாதிக்காய், அவகோடா, சா்வசுகந்தி, லவங்கம், மிளகு கன்றுகள் குறிப்பிட்ட அளவு இருப்பு உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு, காவேரி கூக்குரல் உதவி எண் 80009 80009 எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.