தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
ரூ.37 லட்சத்தில் பள்ளிக் கட்டடப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சியில் ரூ. 37 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதிய கட்டடம் கட்டும் பணிகளை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சி, நடுபட்டறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டடம் சேதமடைந்ததால் அதை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து பழைய கட்டடம் அகற்றப்பட்டு அதே இடத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-25- நிதியில் கீழ் ரூ. 37 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கட்டுமான பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி மற்றும் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் தே.பிரபாகரன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், ஆலங்காயம் மத்திய ஒன்றிய பொறுப்பாளா் வி.ஜி.அன்பு, வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினா் பொன்னம்பலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் அச்சுதன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.