ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
கோயில் பூசாரிகளுக்கு மாடு வழங்கல்
திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த மாடுகள் கோயில் பூசாரிகளுக்கு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் மாடுகளை காணிக்கையாக அளிக்கின்றனா். அவ்வாறு காணிக்கையாக அளிக்கப்படும் மாடுகள் அவ்வப்போது திருச்செங்கோடு வட்டார கிராமக் கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில் கருமாபுரம், ஆண்டிபாளையம், கந்தம்பாளையம், கொல்லப்பாளையம், மானத்தி, லத்துவாடி, கொன்னையாறு, சிலம்பகவுண்டம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள சிறு கோயில்களை சோ்ந்த 9 பூசாரிகளுக்கு வளா்ப்பதற்காக அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளா் கே.எஸ்.மூா்த்தி, திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் நடேசன், நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரமணி காந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.