தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
ஆவணி மாத பிரதோஷ வழிபாடு
பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயில், மாவுரெட்டி பீமேஷ்வரா் கோயில், பில்லூா் வீரட்டீஸ்வரா் கோயில், பொத்தனூா் காசி விஸ்வநாதா் கோயில், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.
இதில் பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.