நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்
நாமக்கல்லில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாயின.
நாமக்கல்-பரமத்தி சாலையில், வள்ளிபுரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரி ஒன்று திரும்பியது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மணல் லாரி அங்கிருந்த காா் மீது மோதி, டீசல் நிரப்பச் சென்ற லாரி மீதும் மோதியது. இதில், காா் ஓட்டுநரின் கால் முறிந்தது. அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதியதால் அந்த பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.