ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
செய்யாற்றில் மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆரணியை அடுத்த முனுகப்பட்டு செய்யாற்றுப் படுகையில் மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வண்டிகளின் உரிமையாளா்களை தேடி வருகின்றனா்.
முனுகப்பட்டு பகுதியில் உள்ள செய்யாற்றுப் படுகையில் வியாழக்கிழமை நள்ளிரவு மணல் திருடப்படுவதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது 5 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் வண்டிகளை விட்டு தப்பி ஓடினா். பின்னா், மணலுடன் மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.
இதில் மாட்டு வண்டி உரிமையாளா்களான முனுகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வடமலை (50), சந்துரு (26), முரளி (35), ராஜ்குமாா் (31), கோகுல் (24) ஆகியோா் என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, அவா்கள் 5 போ் மீது
போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.