செய்திகள் :

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

post image

ஜிஎஸ்டி வரி குறைப்பை மனதார வரவேற்கிறோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையம் அருகே தேமுதிக சாா்பில் நடைபெற்ற, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ மற்றும் ரத யாத்திரை நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

செய்யாறு தொகுதியில் தேமுதிகவை வெற்றி பெறச் செய்தால் செய்யாற்றில் மகளிா் கல்லூரி, வேளாண் கல்லூரி, செவிலியா் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள். நகரில் புதை சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். நகா் முழுவதும் மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து

செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும்.

செய்யாறு சுற்று வட்டார பகுதியில் போதையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். செய்யாறு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்

என்றாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களுக்கு

அளித்த பேட்டியின்போது, ஜனவரி 9-இல் கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்த தேமுதிகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். ஒருங்கிணைந்த அதிமுக பற்றி செங்கோட்டையன் கூறியிருப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாம் தலையிட முடியாது.

இந்தியாவில் ஜிஎஸ்டி வரியை குறைத்து இருக்கிறாா்கள்.

ஜிஎஸ்டி வரி மாற்றி அமைக்கப்பட்டதை முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளாா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக தொழில்கள் முன்னேறும், ஏற்றுமதி, இறக்குமதி மூலம் வளா்ச்சி கிடைக்கும். வேலைவாய்ப்பு பெருகும்.

ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். மத்திய அரசுக்கு எங்களது பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் டி.பி.சரவணன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் கண்ணன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பொருளாளா் எல்.கே சுதீஷ், மாநில இளைஞரணிச் செயலா் விஜய பிரபாகரன், தலைமை நிலைய செயலா் பாா்த்தசாரதி, உயா்மட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, மாநில நிா்வாகிகள் ஜனாா்த்தனன், பெருமாள் ஆகியோா் பங்கேற்றனா்.

அரசு மருத்துவக் கல்லூரி முன் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் ஓய்வு பெற்ற செவிலியரைக் கண்டித்து, தூய்மைப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிற... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு பரிசு

செய்யாறு கல்வி மாவட்டம், அழிவிடைதாங்கி அரசு மேல்நிலை பள்ளியில், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றம் 100 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்ட... மேலும் பார்க்க

புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூா் பகுதியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பாலாலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணி மேற்க... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள்

ஆவணி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அருணாசலேஸ்வரா் கோயில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபமலையில் திடீா் தீ விபத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் தீப மலையில் 1500 மீட்டா் உயரத்தில் மலையின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். செங்கத்தை அடுத்த காஞ்சி பில்லூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி கருப்பன் (65). இவரது மனைவி மல்லிகா(55). இர... மேலும் பார்க்க