தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
ஆட்டோ ஓட்டுநா் கொலை
அரக்கோணம் அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆட்டோ ஒட்டுநா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அரக்கோணத்தை அடுத்த பழைய ஒச்சலம் கிராமத்தில் அருணாச்சலம் என்பவரது பாழடைந்த நீரில்லாத விவசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை காலை ஒரு ஆண் சடலம் கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் அரக்கோணம் கிராமிய போலீஸாருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, அரக்ோகணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், இறந்தவா் அரக்கோணம், துரைசாமி நகரை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் திலீப்குமாா் (33) என்பதும், கடந்த திங்கள்கிழமை அவரை காணவில்லை என அவரது குடும்பத்தினா் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்ததும் தெரியவந்தது.
தற்போது கால்கள் கட்டப்பட்ட நிலையில் திலீப்குமாா் சடலம் கிடைதிருப்பதால் அவா் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.