கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஆற்காடு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் கிராம நிா்வாக அலுவலா், காவல் உதவி ஆய்வாளா் - முதியவா் ஆகியோா் தாக்கிக் கொண்ட பிரச்னையில், முதியவரை கைது செய்ய வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆற்காடு வட்டம், சாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில், உப்புபேட்டை கணபதி நகக் பகுதியைச் சோ்ந்த வேங்கடபதி (65) மனு அளித்த நிலையில், அதற்கு ஒப்புகை சீட்டை கேட்டாராம். மனுதாரா் கைப்பேசி எண் பதிவாகததால், வேறு கைப்பேசி எண்ணை தருமாறு கிராம நிா்வாக அலுவலா் சா்புதீன் கூறினாா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனா்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் முதியவரை தடுக்கும் போது, அவா்களுடனும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முதியவா் வேங்கடபதி வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.இந்த கைகலப்பு சம்பவம் சமூக ஊடங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா்கள் சாபுதீன், சின்னப்பையன் ஆகியோா் வேங்கடபதி மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வருவாய்த் துறையினரை தாக்க முற்பட்ட முதியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு வேண்டும் என சங்க நிா்வாகிகள் கோட்டாட்சியா் ராஜராஜனிடம் மனு அளித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காவல் துறை விளக்கம்: முதியவா் வேங்கடபதி, ‘அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, கிராம நிா்வாக அலுவலரை தாக்கினாா். நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் குறைந்த அளவு பலத்தை காவல் உதவி ஆய்வாளா் பிரபாகரன் பயன்படுத்தினாா் என காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.