ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
செய்யாறு தொகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதியிடம் கோரிக்கை வைத்தனா்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.வின் பரிந்துரை பேரில், ஆலத்தூா், வெம்பாக்கம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் உத்தரவிட்டாா்.
அதன்படி, ஆலத்தூா் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தாா்.
அதேபோல, வெம்பாக்கம் பகுதியில் வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தாா்.
கும்பாபிஷேகம் விழா
முன்னதாக, அனக்காவூா் ஒன்றியம்,
கீழாத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், வீரம்பாக்கம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில், தென்கல்பாக்கம் ஸ்ரீவேணுகோபாலசாமி ஆகிய கோயில்களில நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் எம்.எல்.ஏ.கலந்து கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனாய அகத்தீஸ்வரா் கோயில், பைங்கினா் கிராமம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் திருப்பணிகளை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.திராவிட முருகன், சி.கே.ரவிக்குமாா், வி.ஏ.ஞானவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.