கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
அரசு வழிகாட்டுதலின்படி நெல் கொள்முதல் செய்யவேண்டும்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்
அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். 3 தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த, சாா்பு துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் பணிகளின் முன்னேற்றம்,
ங்-சஹம், ங்-யஹக்ஹஞ்ஹண் முன்னேற்றம் மற்றும் உழவா் உற்பத்தியாளா் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த
ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பேசுகையில், காரீப் பருவம் மின்னணு முறையில் வரும் பயிா் கணக்கீடும் பணியை வருகிற 8-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேளாண்மை இணை இயக்குநருக்கும், ஜவ்வாதுமலை வட்டாரத்தில் தரிசுநிலத் தொகுப்பை உடனடியாக கண்டறிய தோட்டக்கலை துணை இயக்குநருக்கும் அறிவுறுத்தினாா்.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு தொடங்கி நெல் கொள்முதல் மேற்கொள்ள மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் அறிவுறுத்தி, அரசு வழிகாட்டுதல்களின்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யவேண்டும். மூன்று தினங்களுக்குள் கொள்முதல் பணத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், இது குறித்து தினசரி அறிக்கை மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், திருவண்ணாமலை மற்றும் கொள்முதல் மேலாளரிடமிருந்து பெற்று சமா்ப்பிக்க ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கும் (வேளாண்மை) மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
பின்னா், கீழ்பென்னாத்தூா் உழவா் சந்தைக்கு மாற்று இடம் தோ்வு செய்யவும், ஜவ்வாது மலையில் உழவா் சந்தை
தொடங்க அரசுக்கு கருத்துரு வேண்டுமென்றும், வேளாண்மை துணை இயக்குநருக்கு ஆட்சியா்
ஆலோசனை வழங்கினாா்.
கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மி.மலா்விழி, வேளாண்மை இணை இயக்குநா் கோ.கண்ணகி, தோட்டக்கலை துணை இயக்குநா் கோகிலாசக்தி, மண்டல மேலாளா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நிா்மலா பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.