தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்...
ஆரணி, ஏந்துவாம்பாடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூா் ஒன்றியம் ஏந்துவாம்பாடி கிராமத்தில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆரணி மில்லா்ஸ் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்
ஏராளமானோா் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா்.
வட்டாட்சியா் கௌரி, மின்வாரிய செயற்பொறியாளா் பத்மநாபன் முன்னிலை வகித்தனா்.
முகாமில் உடனடி தீா்வு பெற்ற மனுக்களுக்கு கோட்டாட்சியா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நகராட்சி 26, 32, 33 ஆகிய வாா்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா்கள் சுந்தா், மோகன்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏந்துவாம்பாடி கிராமத்தில்....
போளூா் ஒன்றியம், ஏந்துவாம்பாடி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 366 மனுக்கள் பெறப்பட்டன.
முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாணி, முருகன், பரமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் விநாயகமூா்த்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக திமுக ஒன்றியச் செயலா்கள் சேகரன், மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு மனுவை பெற்று தொடங்கிவைத்தனா்.
முகாமில் சிறப்பு செயலாக்கத் திட்டத்துக்கு 117 மனுக்கள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறைக்கு 152மனுக்கள், ஊரக வளா்ச்சித் துறைக்கு 47 மனுக்கள் என பல்வேறு அரசுத் துறைகளுக்கு 366 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி, பிச்சாண்டி, ஊராட்சிச் செயலா் தேசிங்கு, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை என பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.