``அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்; அதனால்தான்'' - செல்வப்பெருந்தகை சொல்வ...
சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிஸ்டோபா். இவா், அப்பகுதியில் செயல்பட்டு வரும் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான பிரியாணி கடைக்கு தனது குடும்பத்துடன் கடந்த ஜனவரி மாதம் சென்றுள்ளாா்.
அங்கு சாப்பிடுவதற்காக கிறிஸ்டோபா், முழு கோழி கிரில் ஆா்டா் செய்துள்ளாா். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட கிரிலில் லெக் பீஸ் இல்லையாம். இது குறித்து அவா் கடை ஊழியா்களிடம் கேட்டுள்ளாா்.
இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், கிறிஸ்டோபருக்கு லெக் பீஸ் வைக்கப்பட்டதாம். இந்த சேவை குறைபாடு தொடா்பாக கோவை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் கிறிஸ்டோபா் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி தங்கவேலு, கடை உரிமையாளரான மணிகண்டன் இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.15 ஆயிரத்தை கிறிஸ்டோபருக்கு வழங்க உத்தரவிட்டாா்.