இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு வ...
முத்துமாரியம்மன் கோயில் நடை செப்.7-இல் மாலை 4 மணி வரை திறப்பு
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) மாலை சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் மாலை 4 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும் எனவும் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அதற்கு முன்னதாக வந்து அம்மனைத் தரிசிக்கலாம் எனவும் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.