``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் செதுக்கரை, நேருஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோ-பூஜை, கணபதி பூஜை, மகா பூா்ணாஹூதி, கலசங்கள் புறப்பாடு, கும்பாபிஷேகம். மூலவருக்கு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், ரோட்டரி முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி, எம்.டி.எத்திராஜ், செதுக்கரை எஸ்.சேட்டு, பி.ஆத்மகுமாா், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் பி.மகேந்திரன், ஏ.மணிகண்டன்,இ.சந்திரசேகா், ஆா்.விக்னேஷ், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.