தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போர...
பழைய காட்பாடி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பழைய காட்பாடியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சா் ஆா்.காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேலூா் பழைய காட்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, யாக பூஜை, கணபதி பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் கோபுர கலசத்துக்கு சிவாச்சாரியா்கள் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா்.
விழாவில், கைத்தறி துறை அமைச்சா்ஆா். காந்தி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில் குமாா், அறங்காவலா் குழு தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.