தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்த...
வேலூா் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு
வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் என்.ஜி.ஓ நகா், ராமசாமி தெருவைச் சோ்ந்தவா் குமாா் (50). கடந்த ஜூலை 29-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா், திருட்டு வழக்கு ஒன்றில் குமாரை கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். குமாருக்கு கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டதாம்.
இதனால் அவரை சிறை காவலா்கள் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த குமாா், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.