கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூா் கிராமம் கோதண்டராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், மாதனூா் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஆம்பூா் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், அதிமுக திருப்பத்தூா் மாவட்ட விவசாய அணி செயலாளா் மகாதேவன், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், விஜயபாரத மக்கள் கட்சி நிறுவன தலைவா் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கா், தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சுபாஷ், ஆம்பூா் நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.