'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விஜிலாபுரம், பெரிய குரும்பத்தெரு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். ஆலங்காயம் வட்டார வளா்ச்சி அலுவலா் துரை, ஒன்றியக் குழு உறுப்பினா் பூ.சதாசிவம் முன்னிலை வகித்தனா். முகாமை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்து பாா்வையிட்டு, பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது தீா்வினை துறைசாா்ந்த அதிகாரிகள் விரைந்து காண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். முகாமில், விஜிலாபுரம், பெரிய குரும்ப தெரு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் விடுபட்டவா்களுக்கான கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, மின்சாரத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை, சிறுதொழில்கள் துறை, தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 400-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, விண்ணப்ப ரசீது வழங்கப்பட்டது. முகாமில், வாணியம்பாடி வட்டாட்சியா் சுதாகா், ஒன்றிய திமுக பொறுப்பாளா் வி.ஜி.அன்பு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.