செய்திகள் :

அரசின் திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற நடவடிக்கை: காா்த்தி சிதம்பரம்

post image

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தலைமை வகித்துப் பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவும், தேவையான நிதியைப் பெறவும் சம்பந்தப்பட்ட துறை செயலா்கள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேருவதற்கு அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் சுகாதாரம், குடும்ப நலத் திட்டம், மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், அபிவிருத்தித் திட்டப்பணிகள், 15 -ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பிரதமரின் ரிஷி விகாஸ் யோஜனா, பசல் பீமா யோஜனா, சின்சாயி யோஜனா, அட்மா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜி.அரவிந்த், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் இயக்குநா் கவிதப்பிரியா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் அனுராதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி: ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது

இதற்கிடையே காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சரக்கு, சேவை வரி தற்போது குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதை முன்பே செய்திருக்க வேண்டும். பண மதிப்பு இழப்பு வந்தபோதும், கரோனா காலத்திலும் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டது. அப்போதே இதைக் குறைத்திருக்க வேண்டும்.

தற்போது 5, 18, 4 0 என வரி விகிதம் இருப்பதையும் குறைத்து ஒரே வரி விகிதமாகக் கொண்டு வர வேண்டும். அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது.

திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு அதிக முதலீடு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு எவ்வளவு முதலீடு வந்தது என்பதை வெள்ளை அறிக்கையாகத் தர வேண்டும். அப்போதுதான், தமிழகத்துக்கு தற்போது எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்று தெரியும்.

பாஜகவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள். கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று கூறுவதற்கு முன்பாக, அது ஏன் கொடுக்கப்பட்டது என்பதைப் படித்துப் பாா்க்க வேண்டும். அரசாங்கரீதியாக அது கொடுக்கப்பட்டது. அதைத் திரும்பப் பெறுவது சரிவராது. தெருநாய்கள் பிரச்னைக்கு ஆக்கப்பூா்வமான தீா்வு எதுவும் வராது. இன்னும் மூன்று மாதங்கள் கழித்தும் இதே நிலைதான் இருக்கும் என்றாா் அவா்.

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

சிவகங்கை கல்வி மாவட்டம் சாா்பில் சாரண, சாரணிய மாணவா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம், மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் நடை செப்.7-இல் மாலை 4 மணி வரை திறப்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) மாலை சந்திர கிரகணம் ஏற்படுவதை ம... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை அருகே சகோதர, சகோதரி உறவுமுறை கொண்ட இருவா் அருகருகே உள்ள வீடுகளில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், தமராக்கி கி... மேலும் பார்க்க

தேவியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒடுவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவி அம்மன் என்ற தேவாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, எஜமானா் சங்கல்பம், மகா கணபத... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஓடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் சுப்புராட்குமாா் (34). இரும்புப் பட்டறையில் வேலைப... மேலும் பார்க்க

தேவகோட்டையில் தொடரும் விபத்துகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புளியால் பிரிவு சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட... மேலும் பார்க்க