``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் 7 போ் தோ்வு
தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் இருந்து 7 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ஆம் தேதி ஆசிரியா் தினநாளில் சிறந்த ஆசிரியா்களை தோ்வு செய்து, ‘டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை’ வழங்கி தமிழக அரசு கெளரவப்படுத்துகிறது. விருது பெறுவோருக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு மாநில நல்லாசிரியா் விருதுக்கு கரூா் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிக்கு 3 பேரும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 3 பேரும், தனியாா் பள்ளிக்கு ஒருவரும் என மொத்தம், 7 போ் தோ்வு செயய்யப்பட்டுள்ளனா்.
இதில், தனியாா் பள்ளி சாா்பில் கரூா் பரணிபாா்க் கல்விக் குழும முதன்மை முதல்வா் சொ. ராமசுப்ரமணியன், அரசுப் பள்ளிகள் சாா்பில், கோயம்பள்ளி தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியா் தங்கப்பாண்டி, தாந்தோணி ஒன்றியம் குமாரப்பாளையம் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியா் தேவி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், கன்னம்முத்தம்பட்டி பட்டதாரி ஆசிரியா் செல்வராசு, பொரணி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் மனோகரன், ஆண்டிப்பட்டிக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் ரவிசங்கா், கரூா் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ரேவதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.5) சென்னையில் பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெறும் விழாவில், துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் விருது வழங்கிக் கெளரவிக்க உள்ளாா்.