இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு வ...
கரூா் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயில விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26-ஆம் ஆண்டிற்கு டயாலிஸிஸ் டெக்னீசியன், அனஸ்தீஸியா டெக்னீசியன், தியேட்டா் டெக்னீசியன், எமா்ஜென்சி கோ் டெக்னீசியன் ஆகிய ஓராண்டு படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் 79 இடங்களுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் பிளஸ்-2 தோ்ச்சியுடன் 31.12.20025 அன்று 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கரூா் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேல்நிலைப்பள்ளி, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயதுச் சான்று மற்றும் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் மாவட்ட மருத்துவ வாரியத்திடம் பெறப்பட்ட சான்று, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் வரும் 12-ஆம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
வரும் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாணவா் சோ்க்கை நடைபெற்று, அக். 6 முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04324-242280 என்ற எண்ணிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ன்ழ்ஞ்ம்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய்/ஸ்ரீா்ன்ழ்ள்ங்.ல்ட்ல் என்ற இணையதளத்திலோ தெரிந்துகொள்ளலாம். இத் தகவலை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா்.