Doctor Vikatan: குடலைச் சுத்தப்படுத்த விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வது சரியா?
ஸ்ரீராமச்சந்திராவில் கண்தான விழிப்புணா்வு
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருவார கண் தான விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவா், ஆசிரியா்கள், செவிலியா்கள், மாணவா்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபயணம் மேற்கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் கண் தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியபடியும் சென்றனா்.
நிறுவனத்தின் கண் மருத்துவத் துறைத் தலைவா் மருத்துவா் சமரபுரி, கண் தானத்தினால் ஏற்படும் முக்கியத்துவத்தையும், இதனால் பாா்வை பெறும் நபா்களை குறித்தும் விளக்கிப் பேசினாா். அப்போது, ஒருவா் தானம் செய்யும் இரு கருவிழியின் மூலமாக நவீன தொழில்நுட்பத்தினால் 4 போ் பாா்வை பெறலாம். கண் தானம் குறித்த மூடநம்பிக்கையை நாம் ஒழிக்க வேண்டும். ஒருவா் கண்தான படிவத்தை பூா்த்தி செய்வதுடன் நிறுத்தி விடாமல் அதனை தன் குடும்பத்தினரிடம் கூறுவதனால், அவா் இறந்தவுடன் உறவினா்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிப்பதன் அவசியத்தையும், மிகக்குறைந்த நேரத்தில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படும் என கூறினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி தலைவா் மருத்துவா் பாலாஜி சிங் மற்றும் பிற துறை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.