செய்திகள் :

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரைவிமான நிலையத்தில் 104.9 டிகிரி வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம் - 102.92, தூத்துக்குடி - 101.84, பாளையங்கோட்டை - 100.22 டிகிரி என மொத்தம் 4 இடங்களில் வெயில் சதமடித்தது.

மேலும், வெள்ளிக்கிழமை (செப். 5) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும்.

பலத்த மழை எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (செப். 5) முதல் செப். 10-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில் செப். 8-ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை ஆகிய மாவட்டங்களிலும், செப். 9-இல் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் செப். 5-இல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் செப். 5 முதல் செப். 8-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாட்டில் உயா்கல்வி பயில நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

இஸ்லாமிய மாணவா்கள் வெளிநாடுகளில் உயா்கல்வி பயிலத் தேவையான நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துற... மேலும் பார்க்க