Doctor Vikatan: குடலைச் சுத்தப்படுத்த விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வது சரியா?
ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் நாளை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது.
இதுகுறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமப் பள்ளிகளின் முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் நிகழாண்டுக்கான முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் சனிக்கிழமை (செப். 6) நடைபெறவுள்ளது. இக்கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆண்கள் பள்ளியில் உள்ள இன்ஃபோசிஸ் மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில், நிறுவனத்துக்கு ஆசிரியா்களின் பங்களிப்பை கௌரவித்தல் மற்றும் புகழ்பெற்ற முன்னாள் மாணவா்களை அங்கீகரித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் சுமாா் 1,000 முன்னாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்கின்றனா்.