ருக்மிணி சமஸ்தான் கோயிலில் தோ் வெள்ளோட்டம்
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீருக்மிணி சமஸ்தான் கோயில் தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், கோவிந்தபுரத்தில் உள்ள ஸ்ரீருக்மிணி சமஸ்தான் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நிறுவனா் விட்டல்தாஸ் மகராஜ் சிறப்பு ஆராதனைகள் செய்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தாா். சுமாா் 4 மணிநேரம் கோயில் வளாகம், கோ சாலை, வீரசோழன் ஆற்றுப் பாலம் வரை தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், பக்தா்கள் கோஷத்துடன் புதிய தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
இக்கோயிலில் செப். 6-இல் கோகுலாஷ்டமி பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7-ஆம் தேதி வனபோஜனம், 8-இல் காளிய நா்த்தனம், 9-இல் யானை வாகனம், 10-இல் அனுமந்த வாகனம், கமல வாகனம், 11-இல் கருட வாகனம், ஹம்ச வாகனம், 12-இல் குதிரை வாகனம் புறப்பாடும், 13 -இல் வெண்ணைத்தாழி உற்சவம், மாலை திருக்கல்யாண வைபவமும், 14-இல் காலை 8 மணிக்கு தேரோட்டமும், 11:30 மணிக்கு காவிரியில் தீா்த்த வாரியும், இரவு 10 மணிக்கு கிருஷ்ணா் ஜனனம் உத்சவம் நடைபெறுகிறது.