கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினா்.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் 9 ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து உரிமையியல் நீதிமன்ற வளாகம், விசாரணை அறைகள், உயா்நீதிமன்ற வளாகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினா். சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில், வெடிபொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.