கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
‘உங்களுடன் ஸ்டாலின்’திட்ட முகாம்கள்: பேரவை துணைத் தலைவா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’
திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் முகாமானது நடைபெற்று வருகிறது. அதன்படி, கீழ்பென்னாத்தூா் வட்டம், சோமாசிபாடி அல் அமீன் கலைக் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை வட்டம், தேவனாம்பட்டு பகுதி சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு துறை வாரியாக பதிவு செய்யப்படுவதை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மேலும் முகாமில் மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்பட்டு பட்டாமாற்றத்திற்கான சான்றிதழ்களும், வாரிசு சான்றிதழ்களும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டிற்கான அட்டைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் நிதியுதவி, மகளிா் திட்டத்தின் கீழ் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வேளாண்மை துறை சாா்பில் உளுந்து விதை மானியங்களும் வழங்கினா்.
நிகழ்ச்சிகளில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், வட்டாட்சியா் மோகனராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.