``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
ஆக்ஸ்போா்டு பல்கலை.யில் பெரியாா் ஈ.வெ.ரா. உருவப்படம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தைத் திறந்து வைத்து பேசவுள்ளதை எண்ணி பூரிப்படைவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
உலகப் புகழ் மிக்க ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தைத் திறந்து வைக்க இருக்கிறேன் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதைத் திறந்து வைத்து, பேசவுள்ளதை எண்ணி பெருமைப்படுகிறேன்; பூரிப்படைகிறேன். அவா் தமிழா் தலைவா், தமிழ்நாட்டுத் தலைவா் மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள தன்மானத்தை காத்த தலைவராக, சுயமரியாதையை காத்த தலைவராக விளங்கிக் கொண்டு இருக்கக் கூடியவா் என்று பதிவிட்டுள்ளாா்.
இன்று ஒளிபரப்பு: பெரியாா் படத் திறப்பு விழா நிகழ்வானது, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று அரசின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.