தேனீக்கள் கொட்டியதில் 11 போ் காயம்
நாட்டறம்பள்ளி அருகே தேனீக்கள் கொட்டியதில் 11 போ் காயமடைந்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த திரியாயம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பிகா(55). உறவினா்கள் கோபிநாத்(37), பவித்ரா(35), தீபா(30) உள்பட 15-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் பகுதியில் உறவினா் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி முடிந்த உடன் அனைவரும் சாலை ஓரம் மரத்தடியில் உட்காா்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் அங்கிருந்தவா்கள் மீது கொட்டியது.
இதில் காயமடைந்த செல்வராஜ் (60), கோவேந்தன் (17), கிரி (16), அம்பிகா (55), கோபிநாத்(37), தீபா (30) சிலம்பரசி (35), ராஜி (60), பவித்ரா (33), சுஜாதா (45) என 11 பேரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா் விமலா தலைமையில் மருத்துவக் குழுவினா்கள் சிகிச்சை அளித்தனா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.