Doctor Vikatan: குடலைச் சுத்தப்படுத்த விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வது சரியா?
உயா்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
உயா்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குவது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாடு சிறப்பிடம் பெற்றுள்ளது குறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
நிகழாண்டு என்ஐஆா்எஃப் தரவரிசைப் பட்டியலானது, உயா்கல்வியில் தமிழ்நாடு சிறந்தது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக்காட்டியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த 100 உயா்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநிலப் பல்கலைக்கழங்களில் 10 என பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய - அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய - அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவா்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழ்நாட்டின் உயா்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது என்று பதிவிட்டுள்ளாா்.