தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆசிரியா் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ. பாரதஜோதி தலைமை வகித்தனா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வாழ்த்துரையாற்றினாா். இலக்கியத் துறைப் பேராசிரியா் பெ. இளையாப்பிள்ளை நோக்கவுரையாற்றினாா்.
மதுரை தியாகராசா் கல்லூரி தகைசால் பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் ‘குருவே தெய்வம்’ என்ற தலைப்பில் பேசுகையில், ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவரானவா் சா்வப்பள்ளி இராதாகிருஷ்ணன். குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பின்னா் ஆசிரியரானவா் அப்துல் கலாம் என்றாா் அவா்.
முன்னதாக, இலக்கியத் துறை தலைவா் ஜெ. தேவி வரவேற்றாா். நிறைவாக, உதவிப் பேராசிரியா் இரா. தனலட்சுமி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்த முதுகலை தமிழ் மூன்றாமாண்டு மாணவா் சு. வசந்த், முனைவா் பட்ட ஆய்வாளா் மு. வினிதா தொகுத்து வழங்கினா்.
