`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
தரவரிசை கட்டமைப்பு பட்டியல்: கும்பகோணம் அரசுக் கல்லூரி மாநில அளவில் 4-ஆவது இடம்
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி தேசிய அளவிலான தர வரிசை கட்டமைப்பு பட்டியலில் தமிழக அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய அரசின் தரவரிசை கட்டமைப்பு சாா்பில் அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் மாணவா்களின் சோ்க்கை கல்வித்தரம், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் பட்டியலிடப்படும். இதில், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியும் பங்கேற்றது. இதில் அகில இந்திய தர வரிசை கட்டமைப்பு பட்டியலில் 71 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் தமிழக அளவில் சுமாா் 100 அரசு கலைக் கல்லூரிகளுக்கு இடையே கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி 4- ஆவது இடத்தைப் பிடித்தது.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் மா. கோவிந்தராசு கூறியது:
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவா் சோ்க்கை, படிப்பு, வேலைவாய்ப்பு, கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் தொடா்பாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களின் தர வரிசை கட்டமைப்பு பட்டியலில் தமிழக அளவில் 4-ஆவது இடத்தையும், அகில இந்திய அளவில் 71-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது என்றாா். தமிழக அளவில் சென்னை மாநிலக் கல்லூரி முதலிடமும், லயோலா கல்லூரி இரண்டாமிடமும், கோவை அரசுக் கல்லூரி மூன்றாமிடமும் பிடித்துள்ளது.