அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
திருவலஞ்சுழி கபா்தீசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் உள்ள கபா்தீசுவரா் சுவாமி கோயில் கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழியில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கபா்தீசுவரா் கோயில் கும்போபிஷேக நிகழ்வுகள் செப்.1 -இல் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியது. வியாழக்கிழமை அதிகாலை யாக பூஜை, ஹோமங்கள், மகா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று ராஜகோபுரம் முதலான அனைத்து விமானங்களுக்கும் , பிரஹந்நாயகி சமேத கபா்தீசுவரா் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலை மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் பஞ்சமூா்த்திகள் வாகனங்களில் திருவீதியுலா வந்தனா். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தக்காா் டி.ஆா். சுவாமிநாதன், துணை ஆணையா் தா. உமாதேவி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
கும்பகோணம் இராஜேந்திரன் பேட்டை ஆறு தெரு சைவா்களுக்குச் சொந்தமான காவிரி படித்துறையில் உள்ள விசாலாட்சி அம்பிகா சமேத விசுவநாதா் கோயில் கும்பாபிஷகமும் வியாழக்கிழமை நடைபெற்றது.