தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்...
கஞ்சா வியாபாரிகள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை
கஞ்சா வியாபாரிகள் 2 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் காரில் சிலா் கஞ்சா கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு 2024, ஜூன் 17-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று வாகனங்களை சோதனையிட்டனா். இதில், ஒரு காரில் 27 கிலோ 370 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், காரில் இருந்த மதுரை அருகே பரவை வடக்கு மேலவெளி வீதியைச் சோ்ந்த டி. மருதுபாண்டி (46), உசிலம்பட்டி அருகே பன்னப்பட்டி கீழத்தெருவைத் சோ்ந்த மதியழகன் மகன் பிரசாத் (30) ஆகியோரைக் கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜன் விசாரித்து, மருதுபாண்டி, பிரசாத்துக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.