``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
காதலி இறந்த துக்கத்தில் இளைஞா் தற்கொலை
காதலி இறந்த துக்கத்தில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை அருகேயுள்ள தொண்டாமுத்தூா், கலிக்கநாயக்கன்பாளையம் குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் தனுஷ் (21). இவா் அந்தப் பகுதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை தனுஷ் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம், மஞ்சேரியில் உள்ள உறவினா் வீட்டுக்கு ஓணம் பண்டிகை கொண்டாட அந்தப் பெண் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். அப்போது, அவா் ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதனால், மனவேதனையில் இருந்த தனுஷ் விஷம் குடித்துவிட்டு புதன்கிழமை வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
வாசலில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.