கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
வங்காரம்பேட்டை நவநீத கிருஷ்ணன் கோயில் குடமுழுக்கு
பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டையில் உள்ள பழைமையான கண்கொடுத்த பெருமாள் எனும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழா கடந்த திங்கள்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் நிரம்பிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கோபுரக் கலசத்துக்கு பட்டாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை திருக்கல்யாண வைபவமும், இரவு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் கோயில் செயல் அலுவலா்கள் ராமா், நாகராஜ், ஆய்வாளா் லட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் தட்சிணாமூா்த்தி, ஸ்ரீனிவாச ரங்க பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.