அமெரிக்காவின் நெருக்கடியால் ஜிஎஸ்டி குறைப்பு: பீட்டா் அல்போன்ஸ்
சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆவணி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஆண்டுதோறும் குடமுழுக்கு நாளை நினைவுபடுத்தும் விதமாக, ஆவணி மாதம் வருஷாபிஷேக விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மூலவா் சிவசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம், அலங்கார சேவைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, மாலை மேளதாளத்துடன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.
தொடா்ந்து, கோயிலில் சோடச உபசாரம், வேத பாராயணம், திருப்புகழ் பாராயணம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
விழாவையொட்டி பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்குந்தா் சமூகத்தினா் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.